Pages

Friday, 3 February 2017

Jallikattu reflects : Creation of New political party in tamilnadu called "TAMILNADU YOUTH PARTY"

ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தை நடத்தி உலகையே அதிரவைத்த தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் சேர்ந்து தற்போது ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ ஆரம்பித்து அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ளனர்.

மேலும், இந்த கட்சிக்கான இணையத்தளம், வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் குரூப் உருவாக்கி தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க இப்போதே அச்சாரம் போட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றுவந்த நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக, மாவட்டம், சட்டமன்ற தொகுதி, தாலுகா, நகரம், கிராமங்கள் வாரியாக கட்சியில் இணைந்துள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வழிநடத்திச்செல்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் அரசியல் அதிகாரம் பெற்றிட அனைவரையும் தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய முழுவிவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கான info@tnyouthparty.com என்ற இ-மெயில் முகவரியிலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படியும் அனுப்புமாறும், விண்ணப்பங்களை அனுப்ப வரும் 7ம் தேதி கடைசி நாள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொறுப்பாளர்களின் விதிமுறைகளையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

நம்மால்..நமக்காக..
நாமே..

நமது தமிழ்நாடு இளைஞர் கட்சியின் தாரக மந்திரத்தை போலவே நமது கட்சியின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை நாமே தேர்வு செய்ய இருக்கின்றோம். நிர்வாகியாக விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் இரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 1) விருப்ப மனு படிவம், இந்த படிவத்தில் உங்களுடைய சுய விபரங் களை குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். 2) மக்கள் ஆதரவு படிவம், இதில் உங்களை ஆதரிக்கும் உங்கள் சட்டமன்றத்தை சார்ந்த 200 நபர்களிடம், அவர்களின் பெயர், தொழில், வாக்காளர் அடையாள எண், கைபேசி எண் மற்றும் அவர்களுடைய கையொப்பம் பெற வேண்டும்.

நீங்கள் 200 நபர்களிடமும் எதற்காக கையொப்பம் பெறப்படுகிறது என்ற காரணத்தை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஏன் இந்த கடினமான தேர்வு முறை என்று நீங்கள் எண்ணினால், ஒரு சட்டமன்ற தொகுதியில் குறைந்தது 2.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், நீங்கள் கையொப்பம் பெறப்போவது வெறும் 200 பேரிடம் தான் (0.08%) !! மக்களிடம் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 7ஆம் தேதி. நம் மின்னஞ்சல் : info@tnyouthparty.com, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு நிர்வாகிகள் தேர்வு நாள் அறிவிக்கப்படும். தேர்வு குழுவின் விபரங்களும் வெகு விரைவில் வெளியிடப்படும்.

புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பொழுது, தனக்கு தெரிந்த நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ தேர்வு செய்யாமல், விரிவான தேர்வுமுறை கொண்டு நல்ல, ஆக்கபூர்வமான நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமிக்க போகும் ஒரே கட்சி, நமது கட்சி தான் என்பதை மார்தட்டி சொல்லுவோம்.

மக்கள் ஆதரவு படிவம் : https://drive.google.com/…/0B3fUNPu1-efhQmpCbENSSEdCe…/view…
விருப்ப மனு படிவம் : https://drive.google.com/…/0B3fUNPu1-efhR01kR1J6cjF1S…/view…

மேலும் தொடர்புக்கு : 8939003599, 9600044518 (தயவு செய்து முக்கியமான தகவலுக்கு மட்டும் அழைக்கவும்)

தயவு செய்து அணைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் அதிகமாக share செய்யுங்கள்.

இளைஞர்களின் வெற்றியை இம்முறை யாரும் தடுக்க முடியாது. நாம் வெல்வோம்.
கட்சியில் இணைய www.tnyouthparty.com என்ற இணையத்தளத்தில் பதியவும்.

No comments:

Post a Comment